நல்ல காலம் பிறக்க போகும் 3 ராசிக்காரர்கள்
வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது கிரகங்களின் சேர்க்கைகளும் நிகழ்வதுண்டு.
அப்படி கிரகங்கள் ஒன்றாக ஒரே ராசியில் பயணிக்கும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 12 மாதங்களுக்கு பின் ஏப்ரல் 14 ஆம் திகதி சூரியன் மேஷ ராசியில் நுழைந்தார். அதற்கு முன் ராகு மேஷ ராசியில் பயணித்து வந்தார்.
அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவானும் மேஷ ராசிக்கு செல்கிறார்.மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணிப்பார்.
இத்தகைய குரு 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைகிறார். குரு மேஷ ராசிக்கு நுழையும் போது ஏற்கனவே அந்த ராசியில் உள்ள சூரியன் மற்றும் ராகுவுடன் இணைந்து பயணிப்பார்.
இந்த சேர்க்கையானது மே 14 ஆம் திகதி வரை இருக்கும். முக்கியமாக இந்த கிரகங்களின் சேர்க்கையால் 3 ராசிக்காரர்கள் பல அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு, சூரியன், ராகு சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பது எளிதாக இருக்கும்.
பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான சில பெரிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களின் ஆளுமை மேம்படும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு, சூரியன், ராகு சேர்க்கை நிகழ்கிறது. இதனால் வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் செயல்திறனால் பாராட்டைப் பெறுவார்கள்.
பணிபுரிபவர்களைத் தேடி நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தேடி வரும். இக்காலத்தில் தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு, சூரியன், ராகு சேர்க்கை நிகழ்கிறது. இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 22 முதல் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை சிறப்பாக இருக்கும். அந்த தன்னம்பிக்கையால் பல காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
இக்கால கட்டத்தில் உங்களால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ன ஆசை நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.