ஆன்மிகம்

சூரியனை போல ஜொலிக்கப் போகும் 3 ராசிக்காரர்கள்

கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால் அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2023 அக்டோபர் 29 ஆம் திகதி முதல் 2023 நவம்பர் 04 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும் இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும்.

துலாம் துலாம் ராசிக்காரர்களே! கடந்த வாரத்தை விட இந்த வாரம் மிகவும் அற்புதமாக இருக்கும். உங்களின் பல முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் அனைத்து வேலைகளையும் முழு ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். உங்களின் பண பிரச்சனைகள் இந்த வாரத்தில் சரியாகலாம். மனதில் உள்ள பெரிய கவலைகள் நீங்கும். பணியிடத்தில் உங்கள் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.

தனுசு தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பல வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த காலகட்டத்தில் சில பெரிய மற்றும் நல்ல மாற்றங்கள் காணப்படும். உங்களின் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். வீட்டு சூழல் நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

மகரம் மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உங்களின் டென்சன் நீங்கும். வீட்டில் சுபகாரியங்களை ஏற்பாடு செய்யலாம். வார இறுதியில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள்.

Back to top button