ஆகஸ்ட் 24 முதல் சிம்ம ராசியில் வக்ரமாகும் புதனால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசியினர்!
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/08/Untitled-design-2023-03-28T073211.263-780x470.png)
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஆக்ஸ்ட் 24 முதல் கிரகங்கள் பின்னோக்கி நகர ஆரம்பிக்க போகின்றது. இவ்வாறு பயணிக்கும் பொழுது மற்றைய கிரகங்கள் வலுவிலக்க ஆரம்பிக்கின்றன. கிரகங்களில் மாற்றம் என்றால் மற்றைய கிரகங்கள் தன் நிலையிலிருந்து வக்ரமாக மாற ஆரம்பிக்கின்றது. அத்துடன் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இதன்படி, ஆகஸ்ட் 24 முதல் எந்த எந்த ராசிக்களுக்கு எப்படியான பலன்கள் கிடைக்க போகிறது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
மிதுனம் – பெயர்ச்சிகளால் மிதுன ராசியில் புதன் 3 ஆவது வீட்டில் பயணித்து வக்கிரமடைகிறார். இதனால் பண வரவு அதிகமாக இருக்கும். பணி செய்யும் இடங்களில் உங்கள் மேலதிகாரிகள் செயல்திறனால் மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் சம்பள உயர்வு கூட வரலாம். நீண்ட நாள் ஆசைகள் கூட நிறைவேறலாம்.
கன்னி – பணிபுரிபவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் மற்றும் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். அத்துடன் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவாள். அத்துடன் புதிய தொழிலால் அதிகமான இலாபம் பெறுவார்கள். வீட்டில் நீண்ட நாட்களாக நடக்காமலிருந்த நல்ல காரியங்கள் கூட இந்த காலங்களில் நடக்கும். பொருள் இன்பத்திற்காக வெளியில் அதிகமான பணம் செல்லும். அந்த விடயத்தில் அதீத கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம் – 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். ஆகையால் தங்களின் வேலையில் அதிகமான கவனம் செலுத்துவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை ஏதேனும் பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அதிலிருந்து விடுபடலாம். காதல், வேலை என எந்த பக்கம் சென்றாலும் வெற்றியாகவே இருக்கும்.