ராகு பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்
பொதுவாக கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவதுடன், ஜோதிடத்தில் நிழல் கிரகமாக ராகு கருதப்படுகின்றது. ராகுவின் தசா மற்றும் மஹாதசா ஒரு நபரை முற்றிலும் அழிக்கிறது என்று நம்பப்படுகிறது. ராகு தனது தற்போதைய ராசியில் இருந்து விலகி, அக்டோபர் 30ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைவார். மீனத்தை ஆளும் கிரகம் குரு ஆகும். இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமற்றதாக கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ராகு சஞ்சாரத்தின் போது எந்தெந்த ராசிக்காரர்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
கடகம்: மீனத்தில் ராகு சஞ்சரிப்பதால் கடக ராசிக்கு சில இன்னல்கள் ஏற்படும். வேலையில் தோல்வி, தொழிலில் நஷ்டம், பணியிடத்தில் அதிகாரிகளின் அதிருப்தியை சந்திக்க நேரிடும், கணவன்-மனைவி இடையே சில பிரச்னைகளால் சச்சரவுகள் அதிகரிக்கும்.
சிம்மம்: ராகுவின் சஞ்சாரம் சிம்ம ராசிக்கு தொந்தரவாக கருதப்படுகின்றது. இதனால் பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதுடன், வேலையிலும் வெற்றி பெற போராட வேண்டுமாம். வேலை செய்யும் இடத்தில் பல சவால்களை சந்திக்கும் இந்த ராசியினரின் திருமண வாழ்க்கை மோசமாக இருப்பதுடன், பெரும் நஷ்டத்தையும் சந்திப்பார்களாம்.
கன்னி: கன்னி ராசியினர் ராகுவின் சஞ்சாரத்தால் கோபத்தினை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமாம். நிதி இழப்பு ஏற்படுவதுடன், வேலையும் பாதிக்கும். குடும்ப வாழ்க்கையிலும், துணையிடத்திலும் கருத்து வேறுபாடு காணப்பாடுகளால் மனம் கலங்காமல் இருக்கும். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்: மீனம் ராசியில் சஞ்சரிக்க போகும் ராகுவால், மீன ராசியினர் பெரும் வேதனையாக காலத்தை சந்திப்பார்கள். இந்த சூழ்நிலையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலக்கை அடையவும் கடின உழைப்பு தேவை… கோபத்தை கட்டுப்படுத்தி ராகு மந்திரத்தை உச்சரிக்கவும். நிதி நிலைமையிலும் சிக்கல் ஏற்படுமாம்.