மாதவிடாய் வலியை தீர்க்கும் செம்பருத்தி
செம்பருத்தி பூப்பற்றி எங்களுக்கு தெரியும். ஆனால் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டோம். அப்படியிருக்கும் செம்பருத்தியினால் எங்கள் உடம்பிற்கு எவ்வகையான நன்மைகள் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.
செம்பருத்தி பூவினால் ஏற்படும் நன்மைகள்
செம்பருத்தி பூ இதழின் சாறு சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் எரிச்சலை நீக்கும்.
இதயம் சம்பத்தப்பட்ட நோய்களை தடுக்கும்.
வாய்புண், வயிற்றுப்புண் உடையவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும்.
சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.
செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி குளித்தால் தலையில் உள்ள பேன்கள் குறையும்.
செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும்.
கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த ஒரு மருந்தாகும்.
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை தீர்க்கும்.