நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா? அதற்கான காரணம் இவைகள் தான்..உஷாரா இருங்க
பெரும்பாலான மக்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றன. அதற்கு சரியான காரணம் என்னவென்று யாருக்கும் எளியில் தெரியாது.
முதுகுவலி என்பது முதுமையில் ஏற்படும் என பெரும்பாலானோர் அறிவார்கள், ஆனால் அது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.
உங்கள் முதுகுவலியின் மூல காரணத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் விரைவில் நிவாரணம் பெறலாம் மற்றும் எதிர்கால பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
முதுகு வலிக்கான உண்மையான காரணங்கள் என்ன?
இறுக்கமான ஆடை அணிதல்
அதிக நேரம் உட்கார்ந்து இருத்தல்
உயரமான காலணிகளை அணிதல்
பின் பார்க்கெட்டில் வைக்கப்படும் பணப்பை
புகைப்பிடித்தல்
நீண்ட நேரம் வாகனம் ஓட்டுதல்
பழைய மெத்தைகள்
உடற்பயிற்சி
உணவுப் பழக்கம்
மன அழுத்தம்
தூக்கமின்மை
தடுப்பற்கான முறைகள்
அலுவலகத்தில் வேலை செய்யும்போது முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும்.
நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது, கீழ் முதுகுக்குச் சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
கூன் விழாமல் நிமிர்ந்து நடத்தல்.
ஒரே மாதிரியான நிலையில் வேலை செய்யும்போது, அவ்வப்போது உடலின் நிலையை மாற்றுதல்.
அமர்ந்திருக்கும்போதுகூடக் கால்களின் நிலைகளை மாற்றலாம்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகா போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்வதல் நல்லது.
கால்சியம் மற்றும் புரதம் மிகுந்த பால், முட்டை வெள்ளைக் கரு, சோயா, உளுந்து கொண்டைக் கடலைப் போன்ற உணவு வகைகளை அதிகம் சாப்பிடுதல்.
முதுகு வலி உள்ளவர்கள் சரியான மெத்தையில் உறங்க வேண்டும்.
அதிக எடையைத் தூக்கக் கூடாது.
முதுகை அதிகமாக வளைக்கக் கூடாது.
திடீரெனத் திரும்பக் கூடாது.
உயரமான காலணிகளை அணியக் கூடாது.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் முதுகில் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, மசாஜ் செய்வது ஆபத்து தரும்.
இருசக்கர வாகனங்களில் கரடு முரடான பாதைகளில் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது நிமிர்ந்து அமர வேண்டும்.
உடல்பருமன் அதிகம் ஆகுவதை தடுக்க வேண்டும்.
புகை பிடிக்கக்கூடாது.
மது அருந்தக்கூடாது.
போதை மாத்திரை சாப்பிடக்கூடாது.
மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
அதிக முதுகு வலி இருந்தால் வைத்தியரை நாடுவது சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.