சுவையான அன்னாசி சட்னி ரெடி: வெறும் 20 நிமிடம் போதும்!
பொதுவாகவே நாம் அனைவரும் சட்னி வகைகள் என்றால் விரும்பி சாப்பிடுவது வழக்கம். அதிலும் புளிப்பு சுவையுடைய சட்னி என்றால் போதும். நாவூறிக் கொண்டே இருக்கும். ஆகவே வீட்டில் இருப்பவர்களுக்கு சுவையான சட்னியை எப்படி அன்னாசி வைத்து செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1/2 தேக்கரண்டி உப்பு
1 பெரிய அன்னாசிப்பழம்
1/2 கப் சர்க்கரை
1 மற்றும் 1/2 ஒரு கப் தண்ணீர்
1 டீஸ்பூன் மிளகாய் செதில்கள்
1/2 தேக்கரண்டி மஞ்சள்
1/2 இலவங்கப்பட்டை துண்டு
ஏலக்காய் 4 காய்கள்
கறிவேப்பிலை (விரும்பினால்)
3 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
முதலில் அன்னாசியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளைாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஏலக்காய் ஆகியவற்றை எண்ணெயில் போட்டு வதக்கவும்.
பின் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
வெட்டி வைத்த அன்னாசி துண்டுகளை சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நிறமாகும் வரை வதக்கவும்.
இறுதியாக அதை அடுப்பில் இருந்து இறக்கி, காற்று புகாத பெட்டியில் அடைத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வந்தால் சுவையான அன்னாசி சட்னி தயார்!