நவராத்திரி ஸ்பெஷல்! எதும் செலவில்லாமல் அரிசி பாயாசம் செய்ய தெரியுமா?
நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த நவராத்திரி பண்டிகை வந்தாச்சு, அசைவ பிரியர்கள் இந்த காலப்பகுதியில் கடுப்பில் வேலை பார்த்து கொண்டிருப்பார்கள். ஏனெனின் நவராத்திரி கொண்டாடப்படும் 10 நாட்களும் வீட்டில் அசைவம் சமைக்க மாட்டார்கள். வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு சைவ உணவுகளையே வித்தியாசமான முறையில் செய்து கொடுப்பார்கள். இது சுண்டல் அம்மனுக்கும் படைக்கலாம். அத்துடன் இனிப்பு வகைகளில் ஒன்றாக பாயசத்தை கூட செய்து படைக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த பாயசத்தை சாமை, தினை அல்லது பச்சரிசி என்று எதில் வேண்டுமானாலும் செய்யலாம். அந்த வகையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் அரிசி பாயசம் எப்படி இலகுவாக செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: கிரீம் பால் – 5 கப், அரிசி – 3 கப், முந்திரி – 12, காய்ந்த திராட்சை – 20-25, ஏலக்காய் (பொடி செய்யவும்) – 5, சர்க்கரை – 1/2 கப்
பாயசம் செய்முறை – முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பசும் பாலை ஊற்றி கொதிக்க விடவும். பால் கொதித்து கொண்டிருக்கும் பொழுது அரிசியை அதில் சேர்க்கவும். அரிசியை கொட்டி 2-3 நிமிடங்களுக்கு பின்னர் கலந்து கொண்டே இருக்கவும். இப்படி செய்யாவிட்டால் பாலூடன் அரிசியை கெட்டியாவதற்கு அதிகமான வாய்ப்புக்கள் இருக்கின்றன. அரிசி நன்றாக வெந்த பின்னர், நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும். இறக்குவதற்கு சில நிமிடங்களுக்கு பின்னர் ஏலக்காய் பொடியை கலந்து கிளறி விடவும். ஒரு கிளறி கிளறி டம்பளர் ஊற்றிக் கொடுத்தால் சுட சுட அரிசி பாயசம் தயார்!