மருத்துவ காரணத்திற்கு கூட ஜாமின் கொடுக்க முடியாது: செந்தில் பாலாஜி வருத்தம்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. செந்தில் பாலாஜியின் பாதை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். இவரை கைது செய்யும் போதே நெஞ்சுவலி ஏற்பட்டு இதய அறுவைசிசிச்சை செய்யப்பட்டது.
பின்பு, சிகிச்சை முடிந்தவுடன் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பிறகு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால்,செந்தில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்நிலையில், புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு, நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், மருத்துவ பரிசோதனை முடிந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், இவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன் பேசினார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டார். அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் -ம், செந்தில் பாலாஜி தரப்பில் என்.ஆர்.இளங்கோவும் வாதிட்டனர். அப்போது, இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று வழங்கினார். அப்போது அவர், “செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்றும், மருத்துவ காரணத்திற்கு கூட செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.