ஏனையவை

வீட்டிலேயே சுவையான ஜாம் செய்வது எப்படி?

பெரும்பாலும் அனைவரும் ஜாம் என்றாலே விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு வகைத்தான். ஜாமை பொதுவாக பாண் மற்றும் ரொட்டியில் இட்டு உண்பார்கள். அதிலும் குழந்தைகள் ஜாம் இருந்தால் உணவு வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். ஆகவே எவ்வாறு வீட்டிலேயே மாதுளை ஜாம் இலகுவாகவும் சுத்தமாகவும் செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் – மாதுளை முத்துகள் – 2 கப், எலுமிச்சைப்பழம் – 2, சர்க்கரை – 2 கப்

செய்முறை மாதுளையை சுத்தம் செய்தவுடன் அதன் அளவிற்கே சர்க்கரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மாதுளையை மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாதுளையை சேர்த்து 2நிமிடங்கள் கிளற வேண்டும். பின்னர் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும், எழுமிச்சை சாற்றை ஊற்றி மிதமான சூட்டில் கிளற வேண்டும். 7 நிமிடங்கள் வரை கலவையில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி, பிசுபிசுப்பு பதம் வரும்வரை கிளறவும். பின் இறுதியாக அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான ஆரோக்கியமான ஜாம் தயார்!

குறிப்பு : – அதிகமாக வேக வைக்ககூடாது. அவ்வாறு செய்தால் சில வேளைகளில றப்பர் போன்று ஆகிவிடும்.

Back to top button