இலங்கை

இலங்கையில் வெளிநாட்டு மருத்துவ பட்டங்களுக்கு அங்கீகாரம்!

இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் படிப்புகளை அங்கீகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு மே 2, 2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. முன்னர், இலங்கையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப் படிப்புகளை அங்கீகரிப்பதன் அடிப்படையில் தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை உள்ளடக்கிய தேசியக் கொள்கையை வகுக்க பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் அடிப்படையில், தேவையான சட்ட ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து ஒரு முன்மொழிவை முன்வைத்தனர். 60 வயதில் கட்டாய ஓய்வு; ரத்து செய்த நீதிமன்றம் 60 வயதில் கட்டாய ஓய்வு; ரத்து செய்த நீதிமன்றம் அதன்படி , 1 முதல் 1000 சர்வதேச தரவரிசைக்குள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவ பட்டங்கள் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Back to top button