உடல்நலம்

வெறும் வயிற்றில் காலை உணவாக பாண் சாப்பிட்டால் இந்த பிரச்சினைகள் எல்லாம் வருமாம்! உஷார்

பொதுவாக நம்மில் பலருக்கு காலை உணவாக பிரட் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். தினமும் கூட காலை உணவுக்கு பிரட் எடுத்துக் கொள்வார்கள். இருப்பினும் தினமும் பிரட் சாப்பிடுவதால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அதிலும் இதனை வெறும் வயிற்றில் எடுத்து கொள்வது இன்னும் பக்கவிளைவுகளையே ஏற்படுத்துகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கச் செய்யும் குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இன்னும் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தும்.

பிரட்டில் உள்ள மிக எளிமையான கார்போஹைட்ரேட்டுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதனால் குடல் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே, காலையில் வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

வெள்ளை பிரட்டில் மிக அதிக அளவில் சோடியம் நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு குறிப்பாக சிறுநீரகத்துக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

குறிப்பு – காலையில் முழு கோதுமை பிரட் (whole wheat bread) ஆகியவற்றுடன் பழங்கள் போன்ற ஆரோக்கியமானவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளவாம். ஆனால் காலையில் பிரட் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக பால் அல்லது பழங்கள் என ஏதாவது எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கட்டாயமாக வெறும் வயிற்றில் பிரட் எடுத்துக் கொள்ளவே கூடாது.

Back to top button