உடல்நலம்

அஜினோமோட்டோ கலந்த உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?

பொதுவாக துரித உணவுகள், பதப்படுத்தப்படும் உணவுகள் போன்றவற்றில் சுவையை அதிகரிப்பதற்கு அஜினமோட்டோ பயன்படுத்தப்படுகிறது. அஜினமோட்டோ என்பது மோனோசோடியம் குளூகோமைட் என்னும் உப்பு. அஜினமோட்டோவை அளவோடு பயன்படுத்தினால் எந்தவித தீங்கும் இல்லை என்பதே ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் அஜினோமோட்டோவை பயன்படுத்துவது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் நிருபமா ராவ் உண்டாகும் பிரச்சனைகள் என்னவென்று கூறியுள்ளார். நாம் பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள சோடியம் அளவானது அஜினமோட்டோவில் மிகுதியாக உள்ளது, இதனால் உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் இதய நோய்கள் ஏற்படும். அந்த வகையில் ஹைப்பர்டென்சன் மற்றும் இதய நோய்கள் கொண்ட நபர்கள் இதனை தவிர்க்க வேண்டும் . Ajinomoto/அஜினோமோட்டோ சிலருக்கு அஜினமோட்டோ சேர்க்கப்பட்டது உணவுகளை சாப்பிட்ட பிறகு தலைவலி, வியர்த்தல், நெஞ்சு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும். அதே சமயம், அஜினமோட்டோவை குறைந்த அளவில் பயன்படுத்துபவர்க்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவது கிடையாது.

மிக அதிகமான அளவில் இதனை சாப்பிடுபவர்களுக்கு தான் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார். அஜினமோட்டோவில் ஊட்டச்சத்து எதுவும் கிடையாது.சுவைக்காக மட்டுமே அஜினமோட்டோவை சேர்க்க வேண்டும் என்றநிலையில், பயன்படுத்துவது அவர்களது விருப்பம் என்றும் கூறியுள்ளார்.

Back to top button