உடல்நலம்

பாடாய்படுத்தும் மூட்டு வலியிலிருந்து விடுபட இந்த ஜூஸ் குடிங்க போதும்

எமது உடலில் இருந்து வெளியேறும் நச்சான ஒரு கழிவு வகை தான் யூரிக் ஆசிட். அதை தான் சிறுநீரகம் சுத்திகரித்து வெளியேற்றும். சிறுநீரகமானது இந்த செயலை செய்யவில்லை என்றால் கை கால் விரல்களின் முட்டியில் பாதிப்பு ஏற்படுமாம். இது ஏற்படாமல் இருக்க பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். இதில் தான் இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, கல்சியம் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது.

பாகற்காய் ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்?

யூரிக் ஆசிட் அளவை பாகற்காய் ஜூஸ் குறைக்கின்றது. மேலும் சக்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் ஏற்படாமலும் தடுக்கின்றது.

பாகற்காய் ஜூஸ் எப்படி செய்ய வேண்டும்?

தேவையான பொருட்கள்

பாகற்காய் – 100 கிராம் , மாங்காய் – 10 கிராம், இஞ்சி சாறு – 01 தே.கரண்டி, எலுமிச்சை – 01 தே.கரண்டி, உப்பு தண்ணீர்

செய்முறை முதலில் பாகற்காயில் எலுமிச்சை சாற்றை ஏற்றி ஊற வைக்க வேண்டும். பின் பாகற்காயுடன் மாங்காய் துருவல் மற்றும் இஞ்சி சேர்க்க வேண்டும். அடுத்து தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு வடிக்கட்டி உப்பு சேர்த்து தினமும் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிக்க வேண்டும்.

Back to top button