நீளமாக முடி வளர உதவும் கருஞ்சீரக எண்ணெய்: தயாரிப்பது எப்படி?
கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரக எண்ணெய் சிறந்த தீர்வாக உள்ளது.
கருஞ்சீரகத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் முடி வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது.
கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
கருஞ்சீரகத்தை எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தும் போது இவை தலைமுடி உதிர்தலை நிறுத்தி முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கின்றன.
மேலும் உச்சந்தலை பகுதியில் இருக்கும் குறைபாட்டை நீக்கும். முடி வறட்சியையும் முடி உதிர்தலையும் கட்டுப்படுத்தும்.
முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கருஞ்சீரக எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய்- 100ml
கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
வெந்தயம்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.
பின் அரைத்து வைத்துள்ள பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தி வரலாம்.