ஆன்மிகம்

இந்து கோவில்களில் மணி இருப்பது ஏன்? அறிவியல் பின்னணி இதோ

பொதுவாக வழிபாட்டு தளங்களுக்கு செல்லும் போது, அங்கு கட்டாயம் மணி தொங்க விட்டிருப்பார்கள். பூஜை நடக்கும் போது இந்த மணியை அடிக்கவும் செய்வார்கள். கோவில்கள் மனிதனிடம் உள்ள தீய அலைகளை அழித்து நல்ல சிந்தனையை மேம்படுத்தவே முக்கியமாக கட்டப்பட்டது. பெரும்பாலான கோவில்களில் மணி இருக்கும். அதை கோவிலுக்கு போகிறவர்கள் எல்லோரும் அடிப்போம். அதிலும் சிறுவர்களுக்கு கோவில் மணியை அடிப்பதென்றால் அலாதி பிரியம் தான். ஆனால் இவ்வாறு கோவிலில் மணி கட்டிருப்பது ஏன் என்ற காரணம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு அதன் காரணத்தை தெரிந்து கொள்வோம்.

கோவில்களில் மணி இருப்பது ஏன்?

கோவில் மணியை அடிக்கும் போது ஓட்கார ஒலி ஒலிக்கின்றது. பூஜை நேரங்களில் தெய்வீக சூழ்நிலைக்குப் பொருந்தாத ஓசைகளை மூழ்கடித்து இறைவனிடம் மனிதனின் மனம் லயிக்க மணியானது உதவுகின்றதாம். கோவில் மணிகள் பெரும்பாலும் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், வெள்ளி, ஈயம் போன்ற பல உலோகங்களால் சரியான கலவையில் உருவாக்கப்படுகின்றது. இவை மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வருகின்றது.

மணியை அடித்தவுடன் வரும் சத்தமானது 18லிருந்து 20 விநாடிகளுக்கு எதிரொலிக்கும். அந்த சில வினாடிகளில் மனித உடலில் இருக்கும் ஏழு குணப்படுத்தும் மையங்களுக்கும் சென்று மனதை ஒருநிலைப்படுத்துகின்றது. மேலும் இந்த மணி சத்தமானது மனிதனின் உள்கோட்டில் ஒரு வித பாசிட்டிவ் வைப்ரேஷன்களை உருவாக்கி எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்தி ஒரு நேர்கோட்டுக்கு கொண்டு வருகின்றது. பூஜை நேரங்களில் அமங்கலமான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் மணி அடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Back to top button