ஏனையவை

நீளமாக முடி வளர செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க

பொதுவாக முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாததால் மற்றும் வெளிப்புற மாசுபாட்டின் காரணமாக பெரும்பாலும் முடி சேதமடைகிறது. அந்தவகையில் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர செம்பருத்தி பூவில் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்
செம்பருத்தி பூ – 15
தேங்காய் எண்ணெய் – 100ml
விளக்கெண்ணெய் – 25ml
ஆலிவ் ஆயில் – 25ml
பாதாம் ஆயில் – 25ml
செய்முறை
செம்பருத்தி பூக்களைக் கழுவி சுத்தம் செய்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு இடும்பு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் காய விடுங்கள்.

இந்த எண்ணெயில் அரைத்து வைத்திருக்கும் செம்பருத்தி விழுதைச் சேர்த்து நன்கு கிளறி விட்டு மிதமாக தீயில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும்.

பின் எண்ணெய் நிறம் மாறியிருக்கும், இப்போது எண்ணெய் மட்டும் தெளிந்து மேலே நிற்கும். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடுங்கள்.

ஒரு நாள் இரவு முழுக்க அப்படியே விட்டுவிட்டு பின் அடுத்த நாள் அதை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை
தலைக்கு பயன்படுத்தும் போது சிறிதளவு எடுத்து வரல்களால் தொட்டு முடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்து நன்கு விரல்களால் 15 நிமிடங்கள் மசாஜ் செய்து விடுங்கள்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை அலசிக் கொள்ளலாம். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும் உங்களுடைய முடி பொலிவாகவும் நீளமாகவும் வளரும்.

Back to top button