ஆன்மிகம்

நாம் உறங்கும் போது வடக்கு – மேற்கு திசையில் தலை வைக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

பொதுவாக அனைவருக்கும் உறக்கம் என்பது மிகவும் அவசியம். ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 8 மணி நேரம் தூங்குவது மிகவும் நல்லது. இப்படி தூங்காவிட்டால் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். தூங்கும் பொழுது சில தவறான பழக்கங்களை கடைபிடித்தால் தூக்கத்தை நிம்மதியாக தூங்க முடியாது. அந்த வகையில் அப்படி என்ன தவறுகளை நாம் விடுகின்றோம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

தவறான படுக்கை பழக்கம்

1. படுக்கும் பொழுது கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது சிறந்தது. தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும் என கூறுகிறார்கள்.

2. மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு அதிர்ச்சி ஆகியவற்றால் தூக்கம் பாதியில் நிலை குலைந்து விடும்.

3.வடக்கிலிருந்து வரும் காந்த சக்தி தலையில் மோதும் பொழுது அங்குள்ள பிராண சக்தியை இழுக்கும் இதனால் இதய கோளாறு நரம்பு தளர்ச்சி உண்டாகும்.

4. மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களையும் கைகளையும் அகல நீட்டி தூங்கவே கூடாது. இப்படிய தூங்குவதால் குரட்டை பலமாக வரும்.

5. நமது இடது கை கீழே வைத்தும் வலது கை மேலோங்கி இருப்பது போல் தூங்க வேண்டும், இடது புறமாக கழுத்தை வைத்து தூங்க வேண்டும். இப்படி தொடர்வதால் சூரியனிலிருந்து வரும் கதிர்களிலிருந்து தப்பிக்கலாம்.

6. வலது புறம் படுப்பதால் இடது மூக்கு வழியாக சந்திர கலை சுவாசம் ஓடும் இதனால் 12 அங்குள்ள சுவாசம் வெளியே சென்று விடும். அத்துடன் செரிமானம் சீராக இருக்காது எனவும் கூறப்படுகின்றது.

Back to top button