உடலில் சிறுநீரக கற்களை கரைக்க உதவும் 5 பானங்கள் இதோ…
உடலில் சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்கள் சிறுநீரக கற்கள் ஆகும். மேலும் மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும். இதனை இயற்கை முறையில் கரைக்க உதவும் 5 பானங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
ஆப்பிள் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.
இதில் சிட்ரிக், அசிட்டிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை ஏராளமாக காணப்படுகின்றன. இது உடலில் சேரும் நச்சுக்களை உடைத்து உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
கொத்தமல்லி சாறு
கொத்தமல்லி இயற்கையாகவே சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது. மேலும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை நீக்கவும் செயல்படுகின்றன.
சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் கொத்தமல்லி சாறு தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கற்களை விரைவில் அகற்றலாம்.
தக்காளி சாறு
தக்காளியில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் பிரச்சனையை போக்க உதவும்.
சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், தக்காளி சாற்றில் உப்பு மற்றும் மிளகு தூள் கலந்து குடிக்கலாம்.
துளசி சாறு
ஆயுர்வேதத்தில் துளசி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. துளசியில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை வழங்க உதவும்.
துளசி இலைகளின் சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனை குணமாகும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் பிரச்னையை குணமாக்குகின்றது.