உடல்நலம்

உடல் எலும்புகளுக்கு வலிமை தரும் உளுந்தங்களி: எப்படி செய்வது?

நாம் உளுந்தங்களி சாப்பிடுவதனால் உடலுக்கு மற்றும் எலும்புக்கு வலிமை தரவும், கர்பப்பை வலு பெறவும் உதவுகின்றன. உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று. ஆரோக்கியம் நிறைந்த உளுந்தங்களி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து- 1 கப்
பச்சரிசி- 1/4 கப்
ஏலக்காய்- 2
பனை வெல்லம்- 2 கப்
உப்பு- 1 சிட்டிகை
சுக்கு தூள்- 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய்- 1 கப்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுந்தை கழுவி சுத்தம் செய்து காய வைத்துக்கொள்ளவும்.

பின் ஒரு வாணலில் உளுந்தை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

அடுத்து தேய் வாணலில் பச்சரிசி சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

இதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்து, பச்சரிசி மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின் ஒரு அடிகனமான பாத்திரத்தில் 1 கப் அரைத்து உளுந்து மாவு, 1 சிட்டிகை உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்த பின் அதை அடுப்பில் வைத்து அல்வா பதம் வரும் வரை கிளறவும்.

அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள வெல்லப்பாகை சேர்த்து கிளறவும்.

நன்கு கொதித்து வரும் வேலையில் அதில் சுக்கு தூள் மற்றும் நல்லெண்ணெய் அவ்வப்போது சேர்த்து கிளறி இறங்கினால் ஆரோக்கியமான உளுந்து களி தயார்.

Back to top button