இலங்கை

ராஜபக்சர்களின் இலங்கை குடியுரிமையை பறிக்க கோரிக்கை

இலங்கையை வங்குரோத்து நிலைக்குட்படுத்தியவர்களை தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கமைய, இதற்கு காரணமானவர்களின் குடியுரிமைகள் இரத்து செய்யப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதியின் பிரதம அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் ஒரு குறிப்பை வைத்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டு வர வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் தீர்ப்பளித்துள்ளது. இந்தநிலையில், பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ள போவதில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button