இலங்கை
ஜனாதிபதி முன்வைத்துள்ள திட்டம் குறித்து நிலைப்பாட்டை அறிவித்த மகிந்த
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கணடவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், பொருளாதார ரீதியில் எம்மீது சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கிறேன். நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் தான் பொருளாதார ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எதிர்காலத்தை இலக்காக கொண்டு 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. நாட்டுக்காக எடுக்கப்படும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். வரவு – செலவுத் திட்டத்துக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.