வீட்டில் மாம்பழத்தை வைத்து உடனே Pancake செய்து அசத்துங்க
பொதுவாகவே அனைவருக்கும் மாலை நேரத்தில் ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதற்காகவே அனைவரும் பல வீடியோக்களை பார்த்து வித்தியாசமாக செய்ய முயல்வார்கள். அந்தவகையில் மாம்பழத்தை வைத்து அனைவருக்கும் பிடித்த பான்கேக் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
1 பழுத்த மாம்பழம்
3/4 கப் பால்
1 டேபிள் ஸ்பூன் வினிகர்
1 முட்டை அல்லது 1/4 கப் மோர்
2 டேபிள் ஸ்பூன் உருக்கிய வெண்ணெய்
1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
1 கப் மைதா
3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
ஒரு சிட்டிகை உப்பு
செய்முறை
முதலில் மாம்பழத்துண்டுகளை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
அடுத்து 1 டேபிள் ஸ்பூன் வினிகரை 3/4 கப் பாலுடன் கலந்து 2 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். இவ்வாறு செய்தால் மோர் தயாராகும்.
அதனுடன் ஒரு முட்டை 1 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்ந்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
பின் 1 கப் மைதா, 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு என சேர்த்தது மென்மையான மா பதத்திற்கு கொண்டு வரவும்.
இப்போது வெட்டிய மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து மாவு கலந்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தோசை போன்று சரைமத்து எடுக்கவும்.
இறுதியாக தேன், மேப்பிள் சிரப், பழம், ஐஸ்கிரீம் என வைத்து பரிமாறலாம்.