உடல்நலம்

விரைவில் உடல் எடையை குறைக்க கருப்பு கவுனி அரிசி பாயசம்; செய்வது எப்படி?

கருப்பு கவுனி அரிசி கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இந்த ஆரோக்கியம் நிறைந்த சத்தான கருப்பு கவுனி அரிசி பாயசம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசி- 1 கப்
நாட்டு சர்க்கரை- 1/2 கப்
தேங்காய் பால்- 1 கப்
துருவிய தேங்காய்- 1/2 கப்
ஏலக்காய் தூள்- 1 டீஸ்பூன்
முந்திரி- 5
திராட்சை- 5
நெய்- 2 ஸ்பூன்

செய்முறை
முதலில் கருப்பு கவுனி அரிசியை இரண்டு முறை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் அதனை ஒரு குக்கரில் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 6 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து குக்கரை திறந்து மத்து வைத்து அரிசியை ஒன்றிரண்டாக மசித்துக்கொள்ளவும்.

பின் வேகவைத்த அரிசியில் தேங்காய்ப்பால், துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வதக்கிய முந்திரி திராட்சை சேர்த்து சாப்பிட்டலாம்.

Back to top button