ஏனையவை

இந்த பொருட்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீங்க.… அடுத்தடுத்து பிரச்சினையை சந்திப்பீர்கள்

பொதுவாக மனிதர்களாகிய ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உணவு, உடை இவற்றினை பகிர்ந்து கொடுப்பது வழக்கம். ஆனால் இவ்வாறு கொடுக்கும் போது சில பொருட்களை மட்டும் நாம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று கூறப்படுகின்றது. பெரும்பாலான வீடுகளில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் முக்கிய விஷயமே மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது தான். அதற்காக அனைத்து பொருட்களையும் பகிர்ந்து கொடுப்பது என்று அர்த்தமில்லை. அந்தபடி உங்களிடம் மட்டும் இருக்கும் உங்களுடைய சில பொருட்களை பகிர்ந்து கொள்ளக்கூடாதாம். அப்படி எந்தெந்த பொருட்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

பகிர்ந்து கொள்ளக்கூடாத பொருட்கள்
வீட்டில் ஒருவர் பயன்படுத்தும் துண்டை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் ஒருவருக்கு தோல் சம்பந்தமான வியாதி இருந்தால் மற்றவர்களும் பாதிக்கப்படலாம். அதுமட்டுமில்லாமல் இவ்வாறு பகிர்வது ஆற்லைக் கெடுக்கவும் அல்லது எதிர்மறையான தாக்கத்தை அளிக்கின்றது.

இதே போன்று விருந்தினர் வந்திருந்தால் அவர்களுக்கு நீங்கள் பயன்படுத்தும் குளியலறையை பகிர வேண்டாம். பல நேரங்களில் உள்ளாடைகள் அல்லது தங்க நகைகளை வைக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு பகிர்ந்தால் எதிர்மறையான ஆற்றலைக் கொண்டு வரும்.

நீங்கள் பணிபுரியும் போது அமரும் நாற்காலியை மற்றவர்களுக்கு பகிரக்கூடாது. ஏனெனில் அவர்களின் எதிர்மறையான ஆற்றல் உங்களுக்கு ஏற்படுவதுடன், பாரமாகவும் இருக்கும். படுக்கையை பகிர்வது கட்டாயம் செய்யவே கூடாதாம். உங்களுக்கு தேவையான வசதியை உங்களது படுக்கையில் வைத்திருக்கும் நிலையில், மற்றவர்கள் அதனை பகிர்ந்தால் இதனால் அசௌகரியம் ஏற்படும்.

உங்களது டீ கப்பை மற்றவர்களிடம் பகிரக்கூடாது, சிலர் தங்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் டீ கப்பில் தான் டீ பருக நினைப்பார்கள். இது சங்கடத்தை ஏற்படுத்தும். இதே போன்று ஒருவரின் திருமண ஆடையை மற்றவர்கள் பகிர்வது கூடாது. இந்த செயல் கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

Back to top button