இலங்கை
நீதிமன்றம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் குறித்து பிறப்பித்த அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இளைஞன் உயிரிழந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றைய இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார். அதேவேளை இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய நான்கு பொலிஸார் இடம்மாற்றப்பட்டதாக கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.