ஏனையவை

அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மனிதனிற்கு ஈடாகாது : செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்த பில்கேட்ஸின் கருத்து!

உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு அளித்த செவ்வி ஒன்றில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு ஈடாகாது என்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அறிவியல் தொழில்நுட்பமும் அதன் கண்டுபிடிப்புகளும் உச்சத்தை தொடுவதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒரு இன்றியமையாத காரணியாக விளங்கும், அது உலகை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை, எனவும் அவர் கூறினார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “எப்படித்தான் தொழில்நுட்பம் புதிய விடயங்களைக் கண்டுபிடித்து வளர்ச்சியடைந்தாலும், எத்தகைய சக்தி வாய்ந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மனிதர்களுக்கு ஈடாகாது. அது ஒருபோதும் மனிதர்களுடைய வேலையை பறிக்கவு ம் முடியாது, ஏனென்றால் மனிதர்கள் தான் தொழில்நுட்பத்தை இயக்குபவர்கள்.

இந்நிலையில், எதிர்காலத்தில் மனிதர்கள் வேலை செய்யும் நாட்கள் குறைவடையும் வாய்ப்புக்கள் அதிகளவில் உண்டு, வருங்காலங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மனிதர்கள் வேலை செய்யக்கூடிய சூழல் உருவாகக் கூடும். எனவே, உழைத்து பழக்கப் பட்ட மனிதர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும், உழைப்பு மட்டுமே வாழ்க்கையின் நோக்கம் அல்ல என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கான சவால்கள் எளிதாகும், வேலைப்பளு குறைவடையும், அதேநேரம் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நகர்த்தலாம் என நினைப்பதும் அர்த்தமற்றது” என்றார்.

Back to top button