இலங்கைக்கு 2024-ல் வரும் சுனாமியால் ஆபத்து; நடிகர் அனுமோகன் ஆரூடம் பலிக்குமா?
எதிர்வரும் 2024ம் ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இதனால் இலங்கை தீவே காணாமல் போய் விடும் என்று பிரபல நடிகர் அனுமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அனுமோகன்
நடிகர் அனுமோகன் கோவையைச் சேர்ந்த நிலையில், மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த இவர், 1980ம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமானார். பின்பு சில படங்களை இயக்கிய இவர், நடிகராகவும் வலம் வந்தார். படையப்பா படத்தில் அந்த பாம்பு புத்துக்குள்ள கைய விட்டீங்களே கடிக்கலையா என ரஜினிகாந்தை எங்கு பார்த்தாலும் கேட்ட வசனம் இவரை மேலும் பிரபலமாக்கியுள்ளது. இந்த படமானது இவர் 2,3 ஆண்டுகளாக படவாய்ப்பு இல்லாத நிலையில், கோவில் ஒன்றில் வேண்டிக்கொண்டு 9 வாரங்களுக்கு புற்றுக்கு பால் ஊற்றிய பின்னே இந்த வாய்ப்பு கிடைத்ததாம்.
ஆருடம் பலிக்குமா?
இவர் கூறியுள்ள ஆருடம் தற்போது பேச்சு பொருளாகியுள்ளது. ஆம் இந்தியா உலகக் கோப்பை வெள்ளும் என்றும் இனி ஜெயித்துக் கொண்டே இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால் இவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இவர் அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் 31.12.2024க்குள் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்றும், இலங்கை என்னும் தீவு சுனாமியால் காணாமலே போய் விடும்.
ஏற்கனவே இலங்கை சுனாமி வந்ததால் தான் தனித்தீவாக தற்போது இருக்கின்றது என்றும் 2004ம் ஆண்டு சுனாமி வரும் என்று கூறியும் யாரும் நம்பாமல் இருந்துள்ளனர். ஆனால் 2024ம் ஆண்டு நிச்சயம் சுனாமி வந்து இலங்கை தீவே அழியும் என்று கூறியுள்ளார்.