துலாம் செல்லும் சுக்கிரன்: செல்வம் பெருகும் 3 ராசிகள் – இன்றைய ராசிபலன்!
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.
அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
இதேவேளை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துவக்கம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இன்றைய நாள் இறுதியில் உங்களுக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கும். புது காரியங்களை இன்று தொடங்க வேண்டாம். அன்றாடம் செய்யும் வேலையிலும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை மூன்றாவது நபரை நம்பி ஒப்படைக்க கூடாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்கள் எதிரிகள் உங்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். நீங்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்கான இடத்தை நீங்கள் கொடுக்கக் கூடாது. அமைதியாக இருந்து வரும் பிரச்சனையிலிருந்து தப்பிக்க விவேகத்துடன் செயல்பட வேண்டும். இன்று வேகம் வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வரவு இருக்கும். சுப செலவு ஏற்படும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று ஷாப்பிங் செய்ய வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய கைபேசி, பணம் இவைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளவும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்யக்கூடாது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நேரத்துக்கு முன்பாகவே உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டையும் பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். பதவி உயர்வு வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல செய்தி வரும். அரசு தேர்வு எழுதி இருப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் வீடு தேடி வர உள்ளது. குளிர்ச்சி தரும் உணவு பொருட்களை சாப்பிடாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் சோர்வு இருக்கும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அதனால் அடுத்தவர்கள் மீது கொஞ்சம் கடுக்கடின்னு பேசுவீங்க. உங்களை பார்த்தே நான்கு அடி தூரம் மற்றவர்கள் தள்ளி செல்வார்கள். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை இன்று வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் எந்த தடைகளும் இல்லாமல் நடக்கும். பிள்ளைகளின் மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வாராக்கடன் வசூல் ஆகும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டாதீர்கள். காதில் ஹெட்போன் போட்டு வண்டி ஓட்டாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக அமையும். உங்களை சுற்றி இருப்புபவர்கள் பாராட்டுவார்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். உங்களைப் பார்த்து அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உங்களுடைய வளர்ச்சி இன்று காணப்படும். ஆனால் தலைகனம் வரக்கூடாது. ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகள் நிரம்பிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சி செய்து தோற்ற விஷயங்களை இன்று சாதித்து மனநிறைவு அடைவீர்கள். புதிய வியாபாரம் தொடங்குவது புதிய வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற நல்ல காரியங்களை இன்று தொடங்கலாம். சொத்து சுகம் சேரக்கூடிய வாய்ப்புகளும் இருக்குது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன குழப்பங்கள் இருக்கும். தேவையில்லாத விஷயங்களை யாரிடமும் பேசாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சினை கிடையாது. கணவனின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். சின்ன சின்ன வியாபாரிகளும் என்று எதிர்பாராத நன்மையை அடைவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் பின்னடைவு இருக்கும். சில பேருக்கு வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கும். மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்து பிறகு வேலைக்கு சென்றால் போதும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் கழுத்தை நெரிக்கும். சகோதர சகோதரிகளின் உதவியை நாடுங்கள் நல்லது நடக்கும். பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். இத்தனை நாள் சுமந்திருந்த மன பாரத்தை கீழே இறக்கி வைத்திருப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த சண்டை சச்சரவு சரியாகும். மாத இறுதி என்பதால் கொஞ்சம் பண பற்றாக்குறை இருக்கும். இருந்தாலும் சமாளித்து கொள்வீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். எதிர்த்து பேசாதீங்க.