நாம் அதிகளவில் அரிசி சாதம் சாப்பிடுவதால் ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக, நாம் அதிகளவில் அரிசி சாதம் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் அரிசி சாதம் அதிகம் எடுத்துக் கொண்டால் உடல் பருமன், தொப்பை போன்றவை ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதிகளவு சாதத்தை எடுத்துக் கொண்டால் கல்லீரல் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும். மதிய வேளையில் சாதம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் காலை இரவு வேலைகளில் சாதம் சாப்பிடக்கூடாது. காலையில் சத்தான காய்கறிகறை சாப்பிடுவது சிறந்தது.
மேலும், இரவு நேரத்தில் கடின வேலை எதிலும் நாம் ஈடுபடாததால் அரிசி உணவை தவிர்க்கவும். ஏனெனில் செரிமானம் ஏற்பட அதிக நேரம் எடுக்கும். இரவில் கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இவை உடல் சோர்வையும், தூக்கத்தையும் ஏற்படுத்தும். மேலும் சர்க்கரை அளவும் உடலில் அதிகரிக்கும் நிலையில், மதிய நேரம் அதிகளவு சாதம் எடுத்துக் கொள்ளாமல் அளவாக சாப்பிடவும். அளவாக ஒரு நேரம் மட்டும் சாதம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.