வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சூறாவளி முன்னெச்சரிக்கை
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் நாட்டில் பலத்த காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் படி, வரும் 30ம் திகதிக்குள் தென்கிழக்கு வங்கக்கடல் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, வடமேற்கு திசையை நோக்கி மேற்கு நோக்கி நகர்ந்து செல்லலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் இது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த அறிவிப்பு குறித்து தெற்கு அந்தமான் முகத்துவாரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இயக்கப்படும் பல நாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.