இலங்கை

சித்தங்கேணி இளைஞன் மரணம் தொடர்பில் சித்திரவதைக்கு உள்ளாக்கிய இடத்தில் ஆய்வுகள்!

யாழ்.வட்டுக்கோட்டையில் பொலிஸாரால் உயிரிழந்த நாகராஜா அலெக்ஸ் என்ற இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கிய இடத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கை இன்றையதினம் (28-11-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆய்வுகளை சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உடனிருக்க யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் உடனிருந்த 3வது சாட்சியான மற்றைய இளைஞன், சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸ் நிலையத்திற்குள் உள்ள இடங்களை காண்பித்துள்ளார். இவற்றினை பார்வையிட்டு ஆய்வுகளை முன்னெடுத்த பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் சுமார் ஒன்றரை மணத்தியாலம் வரை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Back to top button