ஏனையவை

தித்திப்பான சுவையில் ஊட்டச்சத்து நிறைந்த Aval Milk Kheer: ரெசிபி இதோ

அன்றாட எடுத்துக்கொள்ளும் உணவுகளை போலவே அவல் ஒரு ஆரோக்கியமான உணவு. அவலில் கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து,நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் கொண்டது. இந்த அவலை பயன்படுத்தி சத்தான மற்றும் சுவையான Aval Milk Kheer எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நெய்- 1 ஸ்பூன்
முந்திரி- 10
திராட்சை- 2 ஸ்பூன்
அவல்- 1 கப்
பால்- 3 கப்
வெல்லம்- 1/2 கப்
Condenced milk- 1/4 கப்
ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் அதே நெய்யில் அவல் சேர்த்து மொறுமொறுன்னு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதித்து வரும்பொழுது அதில் அவல் சேர்த்து வேகவைக்கவும்.

பின் அதில் ஒரு 8 முந்திரியை ஊறவைத்து அரைத்து சேர்த்து கொதிக்கவிடவும். தொடர்ந்து Condenced milk சேர்த்து கொதிக்கவிடவும், இதனால் நன்கு கிரீமி பதத்திற்கு வரும்.

இறுதியாக இதில் எடுத்துவைத்துள்ள வெல்லத்தை பாகு காய்ச்சி இதில் சேர்த்து கொதிக்கவிடவும். ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான Aval Milk Kheer தயார்.

Back to top button