தொப்பையை குறைக்கும் சூப்பரான 5 ஜூஸ்…! தினமும் 1 டம்ளர் குடித்து வந்தாலே போதும்
பொதுவாகவே நம்மிள் பலருக்கு உடல் எடை அதிகரிப்பு என்பது ஒரு கசப்பான விடயமாகும். வேண்டாம் என்று நினைத்தாலும் இது வந்துவிடும். ஒரு சிலருக்கு கொழுப்பானது வயிற்றுப் பகுதியில் படிந்து விடுவதால் தொப்பை அதிகரிக்கும். இது ஓரிரு காலங்களில் தொங்க ஆரம்பித்து விடும். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் பலரும் பல முறைகளை பின்பற்றுவார்கள். ஆனால் அது எதுவும் நிரந்தர தீர்வை கொடுப்பதில்லை. ஆகவே இயற்கையன முறையில் எப்படி தொங்கும் தொப்பையை குறைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஜூஸ் 1
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 1
எலுமிச்சை – 2
புதினா – சிறிது
துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் வெள்ளரிக்காயை அரைத்து, அதில் எலுமிச்சைகளை பிழிந்து புதினாவை பொடியாக நறுக்கி சேர்த்து, இஞ்சியையும் உடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்து வர 15 நாட்களிலேயே தொப்பையில் ஓர் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
ஜூஸ் 2
தேவையான பொருட்கள்
பூண்டு – 3 பற்கள்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1
வெதுவெதுப்பான நீர் – தேவையான அளவு
செய்யும் முறை
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையின் சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று விழுங்கிய பின், இந்த ஜூஸைக் குடிக்க வேண்டும்.
ஒருவேளை உங்களால் பூண்டு பற்களை சாப்பிட முடியாவிட்டால், அதனை தட்டி ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஜூஸ் 3
தேவையான பொருட்கள்
ஹார்ஸ்ரேடிஷ் – 100 கிராம்
இஞ்சி – சில துண்டுகள்
எலுமிச்சை –3
தேன் – 4 டேபிள் ஸ்பூன்
பட்டை தூள் – 2 டீஸ்பூன்
செய்யும் முறை
ஹார்ஸ்ரேடிஷ் மற்றும் இஞ்சியை மிக்ஸியில் போட்டு ஒன்றாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
பின் அதில் தேன், எலுமிச்சை சாறு, பட்டை தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.
ஜூஸ் 4
தேவையான பொருட்கள்
கற்றாழை ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்யும் முறை
1 டம்ளர் நீரில் கற்றாழை ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஜூஸ் 5
தேவையான பொருட்கள்
ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1
பட்டைத் தூள் – 1 சிட்டிகை
தேன் – தேவையான அளவு
தண்ணீர் – 1 டம்ளர்
செய்யும் முறை
முதலில் ஒரு டம்ளர் நீரில், ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை சாறு, பட்டைத் தூள், தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.