தித்திப்பான அன்னாசி அல்வா செய்வது எப்படி?
பொதுவாகவே அன்னாசி வைத்து அனைவரும் கறி செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் இது வைத்து யாரும் அல்வா என்பது செய்து இருக்க மாட்டீர்கள். ஆகவே வீட்டில் பொதுவாக இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி சூப்பரான அன்னாசி அல்வா செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருள்கள்
அன்னாசிப் பழம் – 1 பழம்
ரவை – 1 கப்
முந்திரி – 1 கப்
திராட்சை- 1கப்
நெய் – 2ஸ்பூன்
சர்க்கரை -1/2கிலோ
ஏலக்காய் பொடி – 7கிராம்
எலுமிச்சை சாறு – 1/2ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
கேசரி பவுடர் -தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் ரவை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின் பொடிப் பொடியாக அன்னாசியை வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கிய அன்னாசிப் பழம் மற்றும் அரை கிலோ சர்க்கரை சேர்க்க வேண்டும்.
அதில் சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து வேக வைக்கவும்.
பழம் முழுவதுமாக வெந்த உடன் அதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.
பின் ஏலக்காய் பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
இறுதியாக அதில் வறுத்த ரவையைச் சேர்க்க வேண்டும். இவ்வர்று செய்து எடுத்தால் சூப்பரான அன்னாசி பழ அல்வா ரெடி!