இலங்கை

அகில இலங்கை ரீதியில்வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்ளில் யாழ் மற்றும் கண்டி மாணவிகளின் சாதனை

தற்போது வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கண்டி, மஹாமாய மகளிர் கல்லூரியின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் – வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவர் பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். அத்துடன், பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த பாடசாலை தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

அத்துடன், மூன்றாம் இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் பெற்றுள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடத்தப்பட்ட நிலையில், இந்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 78,103 தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், 13,588 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

Back to top button