ஏனையவை

15 நிமிடத்தில் மொறுமொறு வடை ரெடி; ஒரு கப் அவல் இருந்தால் போதும்

வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மழைநேரத்தில் மாலைப்பொழுதில் டீயுடன் வடை வைத்து சாப்பிடவே அவ்வளவு நிறைவாக இருக்கும். ஒரு கப் அவல் வைத்து 15 நிமிடத்தில் உடனடியாக சுவையான மொறுமொறு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அவல்- ஒரு கப்
அரிசி மாவு- 4 ஸ்பூன்
ரவை- 3 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
சீரகம்- 1 ஸ்பூன்
வெங்காயம்- 1
பச்சைமிளகாய்- 2
இஞ்சி- சிறிய துண்டு
கொத்தமல்லி- 1 கொத்து
கருவேப்பிலை- 1 கொத்து
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை
முதலில் அவலை நன்கு 2 முறை கழுவி தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஊறிய அவலை நன்கு பிழிந்து பிசைந்து எடுத்துக்கொள்ளவும். அதில் அரிசி மாவு, ரவை சேர்த்து நன்கு பிசையவும்.

இதனை தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.

இறுதியாக இதில் சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிணைந்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலில் வடை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் காயவிடவும்.

பின் எடுத்துவைத்துள்ள மாவை வடை போல் தட்டி எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான மொறுமொறு வடை தயார்.

Back to top button