உடல்நலம்

உடலிற்கு வலுசேர்க்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கருப்பு உளுந்து இனிப்பு பணியாரம்: செய்வது எப்படி?

பொதுவாக இனிப்பு பணியாரம் என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் கருப்பு உளுந்தை வைத்து செய்தால் நம் உடலிற்கு அதிக ஊட்டச்சத்தை அள்ளித்தரும். கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன.மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகளில் இந்த இனிப்பு பணியாரமும் ஒன்று. அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் – கருப்பட்டி- 3/4 கப், தேங்காய் துருவல்- 1/2 கப், கருப்பு உளுந்து- 1/2 கப், வெள்ளை உளுந்து- 1/2 கப், ஏலக்காய்- 2, உப்பு- 1/4 ஸ்பூன், அரிசி மாவு- 2 ஸ்பூன், நல்லெண்ணெய்- தேவையான அளவு

செய்முறை – முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள உளுந்தை சேர்த்து 2 முறை கழுவி ஒரு 11/2 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துள்ள கருப்பட்டி சேர்த்து அதனுடன் 3 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டி ஆறவைக்கவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் அல்லது கிரெண்டரில் தண்ணீர் இல்லாமல் ஊறவைத்துள்ள உளுந்து சேர்த்து அதனுடன் பாகு காய்ச்சிய வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும். தொடர்ந்து அதில் ஏலக்காய் மற்றும் உப்பு சேர்த்து மாவை நன்கு பொசுபொசுன்னு மாவை அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் தேங்காய் துருவல் மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு பிணைந்து எடுத்துகொள்ளவும். இறுதியாக ஒரு குழிப்பணியார சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து மாவை ஊற்றி வேகவைத்து எடுத்தால் சுவையான கருப்பு உளுந்து இனிப்பு பணியாரம் தயார்.

Back to top button