நாட்டில் உள்ள தனியார் துறையினரிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி!
இலங்கையில் அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாடாளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.
அதற்கமைய, தனியார் துறையில் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையின் ஊடாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இறுதிப் போரில் மாயமான மோட்டார் சைக்கிள் தெற்கில் மீட்பு இறுதிப் போரில் மாயமான மோட்டார் சைக்கிள் தெற்கில் மீட்பு அதோடு , எதிர்காலத்தில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயக் குழுவும், தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவும் கூடி, சம்பந்தப்பட்ட முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள், சம்பந்தப்பட்ட விஷயங்களில் உடன்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறினார்.