ஏனையவை

வீட்டிலேயே வெறும் 30 நிமிடத்தில் சுவையான பன்னீர் டிக்கா ரெடி!

உலகிலேயே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று வட இந்திய உணவுகளாக தான் இருக்கும். அதிலும் பன்னீர் வைத்து செய்யப்படும் பன்னீர் டிக்கா பிரபலமானதாகும். இது எலுமிச்சை குடைமிளகாய், சாலட் மற்றும் புதினா மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் பெரும்பாலும் பரிமாறப்படும். இதை கடைகளில் வாங்கி சாப்பிட சென்றால் விலை அதிகமாக இருக்கும். அதுவே ஆரோக்கியமான முறையில், குறைந்த செலவில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து பன்னீர் டிக்காவை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பன்னீர் – 250

மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்

மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு பொடி – ½ டீஸ்பூன்

கரம் மசாலா பொடி – ¼ டீஸ்பூன்

சீரக பொடி – ½ டீஸ்பூன்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கசூரி மேத்தி – ½ டீஸ்பூன்

கேட்டியான தயிர் 2-3 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை – 1/2

சாட் மசாலா – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

வெங்காயம் – 1

குடைமிளகாய் – 1

செய்முறை
முதலில் பன்னீர், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

அடுத்து தண்ணீர் அற்ற பாத்திரத்தில் தயிர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

அதில் மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, சீரகப்பொடி, கசூரி மேத்தி, மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போன்று கலந்துக்கொள்ளவும்.

பிறகு நறுக்கி வைத்த பொருட்களை எடுத்து இந்த பேஸ்ட்டில் சேர்த்து 1 மணி நேரமாவது ஊற வைக்கவும்.

அடுத்து டிக்கா செய்வதற்கு குச்சிகளில் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து குத்திக்கொள்ளவும்.

பிறகு ஒரு தோசை கல்லில் அடுக்கி, சமமாக வேகும்படி திருப்பி போட்டு, வேகவைத்து கொள்ளவும்.

Back to top button