சீரற்ற காலநிலையால் காலவரையறையின்றி மூடப்பட்ட வடக்கின் பல பாடசாலைகள்
சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் உள்ள 29 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பாடசாலைகள் இன்று (19.12.2023) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 2 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 9 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மழையினால் அந்தந்த மாகாணங்களில் வசிக்கும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பல அரச பாடசாலை கட்டடங்களில் நலன்புரி முகாம்கள் நடைபெற்று வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வடக்கில் தற்போது இயங்கிவரும் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இராணுவத்தினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.