ஆன்மிகம்

இன்று கும்ப ராசிக்குள் நுழைந்த சனி பகவான்; நற்பலன் பெறவுள்ள ராசிகள் யார்

இன்று (20) சனி பகவான் 2023ல் கும்ப ராசிக்குள் நுழைந்தார். இப்போது 2024 ஆம் ஆண்டு முழுவதும் அங்கேயே இருக்கிறார்.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இந்த பெயர்ச்சி இன்று (20) மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. இதில் சனி பகவான் மகர ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் உள்ள அவிட்டம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

சனி கும்ப ராசிக்கு பெயர்ச்சியால் யாருக்கு ஏழரை சனி? இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகக்கூடிய சனி பகவான் தற்போது மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறியுள்ளார்.

இதனால் கும்பம், மகரம், மீன ராசிக்கு ஏழரை சனி நடக்கிறது. கும்ப ராசிக்கு ஜென்ம சனி, மகர ராசிக்கு பாத சனி, மீன ராசிக்கு விரய சனி அதாவது ஏழரை சனியின் முதல் நிலை தொடங்க உள்ளது.

அடுத்த சனிப்பெயர்ச்சி 2026 இல்
2026 மார்ச் மாதத்தில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அடுத்த சனி பெயர்ச்சி நடக்கும் என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

யாருக்கு ஏழரை சனி

ஏழரை சனி நடக்க உள்ள மகரம், கும்பம், மீன ராசியினர் இந்த காலம் முடியும் வரை கவனமாக இருப்பது அவசியம்.

கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசியினர் கவனம் தேவை.

ஏழரை சனி நடப்பவர்கள் புதிய தொழில், வியாபாரத்தைத் தொடங்குவதிலும், முதலீடுகள் செய்வதிலும் கூடுதல் கவனம், துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. முடிந்தால் தவிர்க்கலாம்.

அதே போல குடும்பத்திலும், பணியிடத்திலும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால், உத்தியோகஸ்தர்கள் வேலையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். திருமண முயற்சிகளைத் தவிர்க்கலாம்.

அல்லது நல்ல ஜோதிடரை அணுகித் தீர்வை பெறலாம்.

நற்பலன் கிடைக்கும் ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மேஷம்

சுமாரான பலன்கள்

ரிஷபம், துலாம், கடகம், சிம்மம், விருச்சிகம்

பரிகாரம்

சனி பகவானின் மோசமான பலன்கள் கிடைக்கக்கூடிய ராசிகள், இருள் கிரகத்தின் பிடியில் விடுபட, நாம் ஒளியைப் பெற்றிட வேண்டும். அதாவது தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதும், யோகா, தியானம் போன்ற விஷயங்களைச் செய்வது நல்லது.

சனியின் அமைப்பால் உடலில் சோம்பல், மோசமான குணங்கள் தோன்ற வாய்ப்புள்ளது. அதனால் நம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.

சனி பகவான் மோசமான கிரகம் அல்ல அவரின் அனுக்கிரகம் இருந்தால் தான் நம்முடைய வேலைகள் சிறப்பாக செய்து முடிக்க முடியும். அதனால் சனீஸ்வரர் வழிபாடு செய்யலாம்.

குறிப்பாக எள் தீபம் கட்டாயம் ஏற்றுவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) தீபம் ஏற்றி வழிபாடு செய்து அவசியம்.

முடிந்த போதெல்லாம் அருகில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வரவும்.

எந்த ராசிக்கு என்ன சனி நடக்க உள்ளது?
மேஷம் – லாப சனி. 11ம் இடம் லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால் நற்பலன்கள் ஏற்படும்.

ரிஷபம் – கர்ம சனி. 10 இடமான கர்ம ஸ்தானத்தில் சனியின் சஞ்சாரத்தால் பிரச்னைகள் குறையும்.

மிதுனம் – பாக்கிய சனி. அஷ்டம சனி முடிவடைகிறது. 9ம் ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார்.

கடகம் – அஷ்டம சனி ஆரம்பம். மோசமான பலன்கள் கிடைக்கும்.

சிம்மம் – கண்ட சனி. சப்தம ஸ்தானத்தில் சனி இருப்பதால் சுமாரான பலன்கள் கிடைக்கும்.

கன்னி – ரோக சனி. உங்களுக்கு ஓரளவு நன்மைகள் கிடைக்கும்.​

துலாம் – பஞ்சம சனி . உங்களின் பிரச்னைகள் குறையும்.

விருச்சிகம் – அர்த்தாஷ்டம சனி. சற்று மோசமான பலன்கள் கிடைக்கும்.

தனுசு – ஏழரை சனி முடிவு. உங்களுக்கு ஏழரை சனி முடிவால் நன்மைகள் நடக்கத் தொடங்கும்.

மகரம் – பாத சனி. ஏழரை சனியின் கடைசி பகுதி நடக்க உள்ளது. சற்று எச்சரிக்கையாக அடுத்த இரண்டரை ஆண்டுகள் கடப்பது நல்லது.

கும்பம் – ராசியிலேயே சனி ஆட்சி, அதிபதியாக அமர உள்ளார். ஜென்ம சனி ஆரம்பம்.

மீனம் – விரய சனி (12ம் வீட்டில் சனி). சற்று மோசமான பலன்களே கிடைக்கும். .

Back to top button