யாழ்ப்பாணத்தில் அதிரடிப் படையினர் நடத்திய துப்பாகிச்சூட்டினால் பரபரப்பு; அச்சத்தில் மக்கள்
யாழ்ப்பாணம், குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இன்று மதியம் வன்முறையை கட்டுபடுத்த சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவத்தின் தொடர்சியாக இன்றும் வியாழக்கிழமை (21) வாள் வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் புதன்கிழமை (20) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை (21) இரவு வாள் வெட்டு குழு ஒன்று தமது எதிராளிகளை தேடி குடத்தனை கிழக்கு, அம்பன் கிழக்கு பகுதிகளில் தேடுதல் நடாத்தியதாகவும் கூறப்படுகின்றது. குடத்தனையில் இன்று மதியம் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் பருத்தித்துறை பொலிசாரும் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடி படை சென்றபின்னர் நேற்றிரவு பதினொரு மணிவரை வீடுகள் மீது தாக்குதல், எதிரணியை தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை சம்பவத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உரியதரப்புக்கள் மேற்கொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடி படை சென்றபின்னர் நேற்றிரவு பதினொரு மணிவரை வீடுகள் மீது தாக்குதல், எதிரணியை தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை சம்பவத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உரியதரப்புக்கள் மேற்கொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.