ஆன்மிகம்

நீங்க வம்பு வழக்குகளிலிருந்து விடுபட செய்ய வேண்டிய வழிபாட்டுமுறைகள்

திக்கவற்றவருக்கு தெய்வமே துணை சான்றோர் வாக்கிற்கமைய வம்பு, வழக்குகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் தவிப்பவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறைகள் பற்றி அறிந்துக்கொள்வோம். வம்பு, வழக்குகள் சிலர் எந்த தவறும் செய்யாவிட்டாலும், அவர்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் வம்பு, வழக்குகளில் சிக்கி, கோர்ட் கேஸ் என அலைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் எதுவும் பண்ணாமல் இருந்து கொண்டிருந்தாலும் சில ஏதாவது ஒரு பிரச்சனைகள் அவர்களை தேடி வந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். இப்படி வழக்குகளில் சிக்கிக் கொள்வதற்கு என்ன காரணம்? இதிலிருந்து விடுபடுவதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வழக்குக்கு காரணமான கிரகம்
ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புக்களை வைத்தே அவர்கள் வழக்குளில் சிக்குவார்களா?

அப்படி சிக்கிக் கொண்டால் அவற்றில் இருந்து விடுபடுவதற்கு அவர்களுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஜாதகத்தில் 6,7, 8, 12 ஆகிய இடங்கள் தான் வழக்குகள், வம்புகள், பிரச்சனைகள் ஆகியவற்றை குறிக்கும் இடங்களாகும்.

வாழ்க்கையில் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்றால் அவர்களின் ஜாதகத்தில் 6 ம் வீட்டை நன்கு கவனித்து பார்க்க வேண்டும்.

வம்பு வழக்கிற்கான ஜாதக அமைப்பு
எதிர்ப்பு, பகை, முரண்பாடாடுகள் ஆகியவற்றை உண்டாவது 7ம் இடம்.

ஜாதகத்தில் 8ம் இடம் என்பது சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு, அதனால் மன உளைச்சல்கள், வருத்தங்கள், அவமானங்கள் ஏற்படுவதை குறிக்கும்.

12ம் வீடு தான் மேலே சொன்ன சிக்கல்களால் ஏற்படும் பண விரயம், பொருள் இழப்பு, நஷ்டம் உண்டாக்கும் இடம். ஆனால் இந்த பிரச்சனைகள், வழக்குகளில் இருந்து நாம் மீண்டும் வருவோமா, மாட்டோமா என்பதை முடிவு செய்யக் கூடியது 11ம் வீடு.

11ம் வீட்டு அதிபதி வலிமையாக இருந்தால் எப்படிப்பட்ட வம்பு, வழக்கு, பிரச்சனையும் நம்மை ஒன்றும் செய்யாது. அப்படியே வந்தாலும் நம்மை காப்பாற்றி, வெற்றியை தேடி தந்து விடுவார்.

பிரச்சனைக்கு காரணமான கிரகம்
செவ்வாயும், சனியும் வம்பு, வழக்கு ஏற்படும் போது நமக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கிரகங்களாகும்.

அதே சமயம் புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் இது போன்ற சமயங்களில் நமக்கு கை கொடுத்து, காப்பாற்றக் கூடிய கிரகங்களாகும்.

உதவும் கிரகங்களின் தசா புத்திகள் நடக்கும் காலம் என்றால் வழக்குகள் நமக்கு சாதகமாக முடியும்.

அதே நேரம் இந்த கிரகங்கள் நீச்சம் பெற்றோ, பாவ கிரகங்களுடன் இணைந்தோ இருந்தாலும், சனி மற்றும் செவ்வாய் உச்சம் பெற்று இருந்தாலும் வழக்குகளால் சிக்கி படாத பாடு படும் நிலை ஏற்படும்.

வழக்குகளில் வெற்றி பெற வழிபாடு
இப்படி வம்பு, வழக்கு, தீராத பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள் வழிபடுவதற்கு ஏற்ற திதி அஷ்டமி திதியாகும்.

அஷ்டமி திதியன்று, துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

துர்க்கைக்கு ஹோமம் செய்வது, பூஜை செய்வது ஆகியவற்றை அஷ்டமியில் செய்யலாம்.

எதுவும் முடியாதவர்கள் அஷ்டமி திதியில் வீட்டில் துர்கை அம்மன் படத்தை வாங்கி வைத்து, பூக்களால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

குங்குமம், பன்னீர், செவ்வரளி மலர்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

செவ்வரளி மலரில் ஒவ்வொன்றாக எடுத்து, பன்னீரில் நனைத்து, குங்குமத்தை தொட்டு துர்க்கைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

“ஓம் தும் துர்கா தேவியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

முடிந்த நைவேத்தியம் படைத்து, என்னை இந்த பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற தாயே என துர்கையிடம் சரணடைந்தால் அவள் அனைத்து பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவாள்.

Back to top button