இலங்கை

வருடத்தின் முதல் நாளே விலையேற்றம்! நாட்டு மக்களுக்கு அடுத்த சுமை

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வற் (VAT) வரி திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை ஜனவரி 1 முதல் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு மீதான வற் வரி மேலும் சேர்க்கப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. எரிவாயுவுக்கு துறைமுகங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் விதிக்கும் 2.5% வரி நீக்கப்பட்டு 15.5% வீதத்தால் விலை அதிகரிக்கப்பட உள்ளது.

அதற்காமைய லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 3565 ரூபாவிற்கு விற்கப்படும் நிலையில் நாளைமுதல் 500 அதிகரிக்கப்பட்டு 4065 ரூபாய்க்கு விற்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு எரிவாயு விலையின் இந்த சடுதியான அதிகரிப்பினால் உணவுப்பொதிகளின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதோடு பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. குறிப்பாக எரிவாயு விலை அதிகரிப்பினால் சிறிய, நடுத்தர குடும்பத்தினர் மற்றும் நகர்புறங்களில் தொழில்புரிவோர் மற்றும் கூழித்தொழிலாளிகளும் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

Back to top button