இலங்கை

நாட்டில் வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

இலங்கை முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 750 ரூபாயாகவும், பீட்ரூட்டின் விலை 380 ரூபாவாகவும், கோவாவின் விலை 500 ரூபாவாகவும், போஞ்சியின் விலை 600 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது. அத்துடன், லீக்ஸ் மற்றும் தக்காளி உள்ளிட்ட ஏனைய மரக்கறிகளின் விலையும் தொடர்ந்தும் அதிகரித்துள்ளது. அதேநேரம் மரக்கறிகளின் விலை உயர்வால் நுகர்வோர் காய்கறிகளை வாங்க வருவதில்லை என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Back to top button