ஆன்மிகம்

தன் பக்தர்களுக்காக மழையை நிறுத்திய சாய் பாபா – உண்மை சம்பவம்

நம் பாரத தேசம் பல அற்புதமான ஆன்மிகப் புதையல்கள் கொண்ட தேசம் என்று இவ்வுலகமே அறியும். பல வகையான மொழி, இன, மத, பண்பாட்டு வேறுபாடுகள் கொண்ட இந்த தேசத்தில் புறவாழ்வின் எல்லாப்பேதங்களையும் கடந்த மஹான்கள் ஒரு சிலர் நாம் நாட்டு மக்கள் அனைவராலும் வழிபடப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. அவர் தன் பக்தர்களுக்காக நடத்திய அற்புதத்தை இங்கு காண்போம்.

ஷீரடி மசூதியில் இருக்கும் சாய் பாபா அவர்களை தரிசிப்பதற்கு அம் மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த “ராவ் பகதூர் மோரேஸ்வர்” என்ற பக்தரும் அவர் மனைவியும் வந்திருந்தனர். பாபாவின் சிறப்பான தரிசனத்தைப் பெற்ற பின் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப அம்மசூதியிலிருந்து புறப்பட்டப் போது, திடீரென்று இடியுடன், கடும்மழைப் பெய்யத் தொடங்கியது. தாங்கள் ஊர் திரும்ப முடியாதோ என்றெண்ணி ராவ் பகதூரும் அவர் மனைவியும் கவலையடைந்தனர். அவர்களின் மனவோட்டத்தை உணர்ந்த பாபா உடனே வெளியே சென்று,

“என் மீது அன்பு வைத்திருக்கும் என் குழந்தைகள், அவர்களின் வீடு திரும்ப சற்று நேரம் மழையை நிறுத்துங்கள் இறைவா” என்று கூறினார். சற்று நேரத்திலேயே கடுமையாக பெய்துகொண்டிருந்த மழை லேசான தூரல் மழையாக மாறிப் பின் நின்று போனது. இவ்வதிசயத்தைக் கண்ட பகதூர் தம்பதிக்கும், அவ்வூரின் மக்களுக்கும் பாபாவின் மீதான பக்தி மேலும் பெருகியது.

Back to top button