உடல்நலம்

சாப்பிட்டவுடனே செரிமானத்தை சீர்படுத்தும் நெல்லிக்கனி: இவ்வளவு சிறப்புக்களா?

பொதுவாக காய்கறிகள், பழங்கள் நம்மிடம் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கின்றது.

அந்த வரிசையில் அதிக ஆரோக்கியத்தை தரும் பழம் தான் நெல்லிக்காய். இதனை நாம் வேண்டிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

“ஏழைகளின் ஆப்பிள்” என்று அழைக்கப்படும் நெல்லிக்கனியில் ஏராளமான ஆரோக்கிய குணங்கள் இருக்கின்றன.

அத்துடன் நெல்லிக்கனியில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்று ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன.

இதன்படி, இவ்வளவு சத்துக்களை தன்னுள் வைத்திருக்கும் நெல்லிக்கனியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கின்றன, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றது. மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்களாகவும் நிறைந்துள்ளதால் சேதமடைந்த செல்களையும் பாதுகாக்கின்றது.

இந்த கனியில் இரும்புச்சத்து இருப்பதால் இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகின்றது. அத்துடன் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் நல்ல பயனை கொடுக்கின்றது.

மலச்சிக்கல் மற்றும் குடல் கோளாறு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியில் ஜீஸ் செய்து குடிக்கலாம். இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் செரிமான கோளாறுகளை சரிசெய்கின்றது.

கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. இதனால் இரத்த அழுத்தம் குறையவும் வாய்ப்பு இருக்கின்றது.

Back to top button