உடல்நலம்

யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வாழைப்பூ… இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

யூரிக் அமிலம் என்பது ரத்ததில் சேரும் கழிவுப் பொருளாகும். பியூரின்களை உடல் உடைக்கும் போது உருவாகும் ஒரு ரசாயனமாகும். பியூரின்கள் உடலில் தானாக உற்பத்தியாகும். இதை தவிர சில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும்.

பொதுவாக சிறுநீரகங்களால் யூரிக் அமிலம் வடிகட்டப்படுகிறது. இருப்பினும், ப்யூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலம் குவிவதற்கு வழிவகுக்கும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தால் வடிகட்ட முடியாமல் போகும் நிலை உருவாகும், இதனால் பல சிக்கல்கள் உண்டாகலாம்.

குறிப்பாக மூட்டுகளில் யூரிக் அமிலம் தேங்கி வலியை ஏற்படுத்தும், கால்களில் விறைப்புத்தன்மையும் ஏற்படும். இது ஹைப்பர்யூரிசிமியா மற்றும் கீல்வாதம் போன்ற நிலைமைகளை ஏற்படுத்தும்.

யூரிக் அமில அளவை உணவுக் கட்டுபாடுகளை கடைப்பிடிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்த பிரச்சினைக்கு வாழைப்பூ சிறந்த தீர்வாக அமையும். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழைப்பூவின் நன்மைகள்
பொதுவாக பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வாழைப்பூவில் நிறைவாக கிடைக்கின்றன. இவை அனைத்துமே நம் உடல் நலனுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பவை. அதுபோக வாழைப்பூவை சாப்பிடுவதால் சிறுநீரகக் கல் பிரச்சினை மற்றும் யூரிக் அமில பிரச்னைக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.

கரையத்தக்க நார்ச்சத்து மற்றும் கரையா நார்ச்சத்து ஆகிய இரண்டு வகை நார்ச்சத்துக்கள் இதில் உண்டு. இவை நம் மெடபாலிச நடவடிக்கையை ஊக்குவிப்பவை. அதேபோல செரிமான சக்தியை மேம்படுத்தும்.

தேவையற்ற கழிவுகளை மலம் வழியாக வெளியேற்றும். பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ போன்ற சத்துக்கள் இருப்பதால் மூட்டு வலி குறையும் மற்றும் எலும்புகளின் அடர்த்தி மேம்படும்.

எலும்புகளுக்கு மத்தியில் சிதைவு ஏற்பட்டால் அதில் யூரிக் அமிலம் தங்கும். அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்ட வாழைப்பூ சாப்பிட்டால் இதில் இருந்து தீர்வு கிடைக்கும் மற்றும் வலி இருக்காது.

Back to top button