இலங்கை

யாழ்ப்பாணத்தில் வாழைப்பழம் வாங்குவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதேவேளை கேரட், லீக்ஸ், வெங்காயம், போஞ்சி, கத்தரி, கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலை பன் மடங்கு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறானவொரு நிலையில், சில நாட்களாக பழங்களின் விலைகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக, யாழ் குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது. அதில் கதலி வாழைப்பழத்தின் விலை என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளது.

கடந்த வருட ஒக்ரோபர் மாதத்தில் வீசிய காற்றால் வாழைமரங்கள் நோயால் பாதிக்கப்பட்டன எனவும் இதனால் உற்பத்தி வீழ்ச்சியுற்று சந்தைகளுக்கு குறைந்தளவு வாழைக்குலைகளே வருவதால் அவற்றின் விலை உயர்வடைந்துள்ளது. குறிப்பாக கதலி வாழைப்பழம் தற்போது கிலோ 150 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Back to top button